களுதாவளை கடற்பரப்பிலிருந்து விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருள் கைபற்றப்பட்டுள்ளது. (காணொளி)

375 0

sequence-01-still043மட்டக்களப்பு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் சிலிண்டர் ஒன்றை ஒத்ததாக காணப்படுகின்றது என கடற்படை தெரிவித்துள்ளது.சுமார் 10 அடி நீளமான சிலிண்டரை ஒத்ததான ஒரு இரும்பு பொருள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி தெரிவித்துள்ளார்.

இது விமானத்தின் பாகமாக இருக்கலாம் என உறுதியாக கூற முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி – களுதாவளை கடற்பரப்பிலிருந்து விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.