பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம்

348 0

anurathapura-storyஅநுராதபுரம் மாவட்டத்தின் பலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஹொரிவில கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக பெயரிடுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

உலக பாரம்பரிய இடமாக ஹொரிவில கிராமத்தை பெயரிடுவதற்கான சான்றுகள் அங்கு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிகழ்ச்சி நிரலின் இலங்கைக்கான பிரதி பிரதிநிதிகலாநிதி பீ.ஜீ.பீ.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அரிய வகையிலான ஏலன்கா கட்டமைப்பு, 12 வாவிகளின் நீர் ஒவ்வொரு வாவிக்கும் தொடர்புப்பட்டுள்ளமை, பயன்படுத்தப்படுகின்ற விவசாய நடைமுறை, பாரம்பரிய வைத்திய முறை உள்ளிட்ட பல பாரம்பரிய விடயங்கள் குறித்த பகுதியில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதிகள் ஹொரிவில பகுதிக்கு இந்த நாட்கள் விஜயம்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.