அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மேல், தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
வட மத்திய மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர்கள் மாகாண சபை அமர்வுகளில் கலந்துக்கொண்டிருந்தமையினால் பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சில முதலமைச்சர்கள் வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

