நிலையவள்

டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 20, 2017
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
மேலும்

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள்- மஹிந்த சமரசிங்க

Posted by - January 20, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க,…
மேலும்

கொழும்பு துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர் வருகை

Posted by - January 20, 2017
அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் அதன் கட்டளை…
மேலும்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாபெரும் பொங்கல் விழா(காணொளி)

Posted by - January 20, 2017
உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராமிய சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் உழவர் திருநாளை முன்னிட்டு 110 பானைகள் கொண்டு பொங்கல்…
மேலும்

அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்கின்றது- திஸ்ஸ

Posted by - January 20, 2017
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்வதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்ட காரணத்தாலேயே, 2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ராமஞ்ய பீடத்தின்…
மேலும்

சரத் குமார குணரத்னவுக்கு பிணை

Posted by - January 20, 2017
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. சரத் குமார குணரத்னவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்தனர். குறித்த வழக்கு இன்று…
மேலும்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 20, 2017
நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் காலநிலையில் இன்று முதல் மாற்றம் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு வடமத்திய மாகாணம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…
மேலும்

நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை(காணொளி)

Posted by - January 20, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை இன்று மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய நெடுந்தாரகை படகு சேவை இன்று காலை வைபவ ரீதியாக மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.150 மில்லியன் ரூபா மதிப்பீட்டில்…
மேலும்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- ரணில்

Posted by - January 20, 2017
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவிலேயே பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற…
மேலும்

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது

Posted by - January 20, 2017
பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பெற்றோர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட நபர் கொழும்பு மோசடி விசாரணை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்