நிலையவள்

பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன் மோதி விபத்து!ஒருவர் பலி

Posted by - March 18, 2017
நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. இன்று அதிகாலை  இடம்பெற்ற இந்த  விபத்தில்  மற்றும் ஓர் நபர் காயமடைந்து,…
மேலும்

வடக்கில் 132 வெடி குண்டுகள் மீட்பு

Posted by - March 18, 2017
வடக்கில் குண்டுகளை அகற்றும் நபர்களினால் 132 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்போது 81 மில்லி மீட்டர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் பெண் ஒருவர் கைது!

Posted by - March 18, 2017
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் வலஸ்முல்ல பிரதேசத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வீரகெடிய யக்கஸ்முல்ல பிரதேசத்தினை சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.
மேலும்

காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - March 18, 2017
புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த 09 வயதுடைய ஜி.பாத்திமா ஹதீஜா என்ற சிறுமி டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பயனளிக்காது காத்தான்குடி ஆதார…
மேலும்

யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம்(காணொளி)

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் இன்று நடைபெற்றது. பாடசாலையின் ஆங்கில சங்கமும், யாழ்ப்பாண வலய றெஸ்க் நிறுவனமும் இணைந்து சிறுவர்களின் ஆங்கில வாசிப்பு திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். பாடசாலையில்…
மேலும்

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு இராணுவத்தினர் இடையூறு(காணொளி)

Posted by - March 18, 2017
  முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமது செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து வருவதாக கேப்பாப்பிலவு மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் இராணுவ முகாம் முன்பாக கடந்த 18 நாட்களாக நில மீட்புப்…
மேலும்

அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவருகிறது(காணொளி)

Posted by - March 18, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கு இருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அரசாங்கத்திற்கு…
மேலும்

தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும்…(காணொளி)

Posted by - March 18, 2017
  யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் துர்க்கை அம்மன் ஆலய அன்னபூரணி மண்டபத்தில் நடைபெற்றது. மகளிர் இல்லத்தின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்…
மேலும்

இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் -இரா. சம்பந்தன்

Posted by - March 18, 2017
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நல்லிணக்கம்…
மேலும்

மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனை

Posted by - March 18, 2017
சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்துள்ளது. கல்ப் டைம்ஸ் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. முக்கிய பிரதிவாதியான ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 83 லட்சம் ரூபா…
மேலும்