கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு இராணுவத்தினர் இடையூறு(காணொளி)

268 0

 

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமது செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து வருவதாக கேப்பாப்பிலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்கள் இராணுவ முகாம் முன்பாக கடந்த 18 நாட்களாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை தீவிரமாக கண்காணித்துவரும் இராணுவம், தமது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இடையூறு விளைவிப்பதன் ஊடாக மக்களை கோபமடையச் செய்து அங்கு அமைதியின்மையினை ஏற்படுத்துவதற்கே இராணுவம் முனைந்து வருகின்றது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவம் தமது போராட்டத்தை கலைப்பதற்கு செய்யும் குழப்பங்களையும், சதி முயற்சிகளையும் தாண்டி தமது நிலம் விடுவிக்கப்படும் வரைக்கும் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவுவில் இராணுவத்தினால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள 482 ஏக்கர் நிலப்பரப்பையும் விடுவிக்குமாறு கோரி அக் காணிகளுக்குச் சொந்தமான 138 குடும்பங்களும் அங்குள்ள இராணுவ முகாம் முன்பாக கடந்த முதலாம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவ முகாம் முன் கொட்டகை ஒன்றினை அமைத்து இரவு பகலாக நில மீட்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.]