இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் -இரா. சம்பந்தன்

227 0

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கும் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து எமது செய்திச் சேவை வினவியபோதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கும் பிரேரணையை இந்தியா எதிர்க்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்திள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன