அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவருகிறது(காணொளி)

345 0

 

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கு இருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அரசாங்கத்திற்கு தொளிவாக தெரியும் எனவும் ஆனால் அது தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுக்கின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனியும் தங்களை போரட வைத்து வேடிக்கை பார்க்க வேண்டாம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்து வாக்குகளை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தாமல் உள்ளமை கவலையளித்து வருகின்றது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாங்கள் நம்பிய அரசாங்கமும், அரசை நம்பவைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தங்களை ஏமாற்றினால் அடுத்த கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிர்கதியான நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிர்க்கதியான நிலை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்குமாக இருந்தால், நிலமை மோசமடையும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி 5 மாவட்டங்களிலும் தொடர்ச்சியான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் உள்ள கந்சாமி ஆலய முன்றலில் கடந்த 27 நாட்களாக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு, தெற்கில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்களுடைய முழுமையான ஆதரவுடன் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.