நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மற்றும் ஓர் நபர் காயமடைந்து, நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

