புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த 09 வயதுடைய ஜி.பாத்திமா ஹதீஜா என்ற சிறுமி டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பயனளிக்காது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த சிறுமி, நேற்று முன்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பயனளிக்காது சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இது வரைக்கும் 36 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்துள்ளார்.

