10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் பெண் ஒருவர் கைது!

345 0

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் வலஸ்முல்ல பிரதேசத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வீரகெடிய யக்கஸ்முல்ல பிரதேசத்தினை சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.