நிலையவள்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலவச வைபை

Posted by - May 25, 2017
கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தின் வளாகத்திலும் இன்று முதல் இலவச வைபை வழங்கப்படுகின்றது. நீதியரசர் மற்றும் சட்டமா அதிபரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இலவச வைபை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாடு பின்நோக்கி செல்வதை தடுக்க முடியாது

Posted by - May 25, 2017
அமைச்சரவை மாற்றத்தினால் நாடு பின்நோக்கி செல்வதை தடுக்க முடியாது என ஒன்றிணைந்த எதிர் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
மேலும்

இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவு

Posted by - May 25, 2017
இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல் தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு…
மேலும்

உண்டியல்களில் சேமிக்கப்படும் பணத்துக்கும் வரி அறவிடப்படவுள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - May 25, 2017
புதிய வருமான வரி சட்ட மூலத்தின் ஊடாக உண்டியல்களில் சேமிக்கப்படும் பணத்துக்கும் வரி அறவிடப்படவுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அதன் பிரதித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் தன்னிச்சையாக தயாரித்துள்ளது.…
மேலும்

ஏறாவூர் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 படகுகள் மாயம்

Posted by - May 24, 2017
ஏறாவூரில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 19 சிறிய மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளன. குறித்த மீன்பிடி படகுகளை தேடும் பணிகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் சமிந்த வலாகுளுகே தெரிவித்துள்ளார். புண்ணக்குடா பகுதியிலிருந்து சென்ற 9 படகுகளும்,…
மேலும்

முல்லைத்தீவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், வருடம்தோறும் தமது வேலைத்திட்டம் தொடர்பில் இளைஞர்களை தெளிவுபடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.…
மேலும்

வவுனியாவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் 90 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்…. (காணொளி)

Posted by - May 24, 2017
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும், மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்…
மேலும்

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - May 24, 2017
  பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி…
மேலும்

யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும்- ஆ.நடராஐன் (காணொளி)

Posted by - May 24, 2017
  யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஐன் தெரிவித்துள்ளார். இன்று கைதடி சித்த மருத்துவ பீடத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச யோகாசன நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சர்வதேச யோகா தினத்தை…
மேலும்

சாவகச்சேரி வர்த்தகர்களால் டிறிபேக் கல்லூரிக்கு கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - May 24, 2017
சாவகச்சேரி மூன்று வர்த்தகர்கள் இணைந்து 300 கதிரைகள் அதிபர் ந.nஐயக்குமாரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டன. 3 இலட்சம் பெறுமதியான கதிரைகளை றிபேர்க் கல்லூரிக்கு சாவகச்சேரியின் வர்த்தக சங்க செயலாளரும் சிவா ரெடிங்கின் உரிமையாளரும் ஆகிய வை.சிவராசா, இலட்சுமி இரும்பக உரிமையாளர் சு.பாக்கியராசா,…
மேலும்