யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும்- ஆ.நடராஐன் (காணொளி)

451 0

 

யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஐன் தெரிவித்துள்ளார்.

இன்று கைதடி சித்த மருத்துவ பீடத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச யோகாசன நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா தின நிகழ்வு கைதடி சித்த மருத்துவ பீடத்தில் இன்று நடைபெற்றது.

சித்த மருத்துவ பீடத்தின் தலைவி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.