புதிய வருமான வரி சட்ட மூலத்தின் ஊடாக உண்டியல்களில் சேமிக்கப்படும் பணத்துக்கும் வரி அறவிடப்படவுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.அதன் பிரதித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் தன்னிச்சையாக தயாரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அல்லது ஆலோசகர்களின் ஆலோசனை எதுவும் பெறப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

