Breaking News
Home / தமிழீழம் (page 137)

தமிழீழம்

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழவன்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை மாங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் (காணொளி)

யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள்  நடைபெற்றன.இந்தியத்துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினரின் ஏற்பாட்டில் பாரதியாரின் நினைவுதினம் யாழ்ப்பாணம் துர்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.இதன் முன்னோடியாக யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியிலுள்ள பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. மலர்மாலையை வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் யாழ்ப்பாண இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் …

Read More »

பனிபொழிவினால் கிளிநொச்சி விவாசாயிகள், நகர்ப்பகுதி மக்கள் பாதிப்பு

கிளிநொச்சியில் கடும் பனி காரணமாக விவசாய வயல் நிலங்கள் பூச்சி தாக்கங்களினால் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கிளிநொச்சி நகர் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பனியினால் மூடியுள்ளது. அதிகாலை முதல் சுமார் 11 மணிவரையும் கடும் குளிருடன் கூடிய பனி பொழிவு மிக அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பனிபொழிவு காரணத்தால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் கிருமிகளின் தாக்கம் …

Read More »

நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன – ஜெனீவா உடன்படிக்கை அமுல்ப்படுத்த வேண்டும்

தமக்குரிய நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன, ஜெனீவா உடன்படிக்கையை அரசு இழுத்தடிப்புக்கள் செய்யாமல், இனிமேலும் காலதாமதங்களை மேற்கொள்ளாமல், உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்நிறுத்தித்தான் நாம் மனித உரிமை தினதில் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றோம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியம் இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரவித்தார். மனித உரிமை தினமான டிசம்பர் 10 சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ …

Read More »

கசிப்பு உற்பத்தி முறியடிப்பு

கிளிநொச்சி கல்மடுநகர் சுடலைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது 5 பெரல் கோடாவும், 20,000 மில்லி லீட்டர் கசிப்பும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது. இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More »

விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதி மத்திய கல்லூரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பகல் 1 மணியவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் சென்ற இந்தச் சிறுவன் பிரதான வீதியைக் கடக்க முற்பட்டபோது பட்டா ரக லொறி சிறுவன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் …

Read More »

யுத்ததின் பின் மதுபானசாலைகள் அதிகரிப்பு – யோகேஸ்வரன்

யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அடுத்த ஆண்டுக்காக வாரவு செலவு திட்டத்தின் மூன்றாம் குழுநிலை விவாத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். யுத்தம் முடியும் போது 48 மதுபானசாலைகள் காணப்பட்டன. எனினும் 11 புதிய மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது! அனந்தி சசிதரன்

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது.

Read More »

செங்கைஆழியான் நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் – கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ்

  செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தினால் கலைஞர்களுக்கான கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் அரங்கத் திறப்புரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கல்விசார் நூல்களையும் எழுதி தமிழ் மொழிக்கு அளப்பரிய பணியாற்றிய …

Read More »

கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்வு

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial