யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது சென்னை திரும்பிய விமானம்

44 0
யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானம் தரையிறங்க முடியாத சூழலால் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது.

சென்னையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (19)  காலை புறப்பட்ட விமானமே தரையிறங்க முடியாத சூழலால் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.