வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

334 0

ஹட்டன் – மல்லிகைப்பூ பகுதியில் வேன் ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை 6.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தொழில்புரியும் சிலர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹெட்டன் நோக்கி வேனில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேன் விபத்திற்கு உள்ளான போது அதில் 6 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் மூன்று பேர் வேனினுள் சிக்கியிருந்த நிலையில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a comment