கல்கிஸ்ஸ மற்றும் பாணந்துறை, காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த சந்தேக நபரொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபர், பொல்கஹவெல பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கல்கிஸ்ஸ மற்றும் பாணந்துறை பிரதேசங்களில் பல வீடுகளினுள் நுழைந்து தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
37 வயதான இம்புல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர், இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

