போதைப்பொருளுடன் 10 பேர் கைது!

466 2

ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த மற்றும் போதைப்பொருக்கு அடிமையான 10 பேரை அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அநுராதபுரம் காவல்துறையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட முற்றுகையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சந்தி, நுவரவெவ வத்தை, மல்வத்துஓய ஒழுங்கை, நிவனதகசைத்திய மற்றும் பண்டுலகம பிரதேசங்களில் போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 4.630 கிராம் ஹேரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகையின் போது போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment