ரணில் விக்கிமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

320 0

WIGNESWARAN-1இன்றைய தினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சில செய்தி நிறுவனங்களே இவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளன. அதற்குத் தான் என்ன செய்யமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், கடந்த பெப்ரவரி மாதத்தில் தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க வடக்கு மாகாணம் தொட்பான மீளாய்வுக் கூட்டம் ஒன்று மாத்திரமே இன்று நடைபெறும்.

திறைசேரியின் தலைவர் பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், உலகவங்கி உட்பட நாட்டின் பல நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.அத்துடன், வடக்கு மாகாணத்தின் முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக கருத்து வெளியிடுகையில், வடக்கு மாகாண மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளாமல் வெறுமனே முதலீட்டாளர் மாநாடு நடத்துவதில் எந்தப் பயனுமில்லையெனவும் தெரிவித்தார்.