
கிழக்கில் இருந்து 64 இராணுவ முகாம்களை அகற்றவுள்ளதாக வாரஇதழ் ஒன்றில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து எந்த ஒரு இராணுவ முகமும் அகற்றப்பட மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

