எதிர்வரும் 29ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் பத்தரமுள்ள ‘சுஹூருபாய’ தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
இந்த புதிய நிலையத்தின் ஊடாக பொது மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியும் என குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு 10 இல் தற்போது இயங்கி வரும் திணைக்களம் எதிர்வரும் 26ஆம் திகதி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கண்டி, மாத்தறை மற்றும் வவுனியாவில் உள்ள பிராந்திய செயலகங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் சேவை 29ஆம் திகதி இயங்காத அதேவேளை, நுழைவு அனுமதி, கடவுச்சீட்டு திருத்தம் மற்றும் பிரஜா உரிமை தொடர்பான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தபட்ட அளவிலேயே நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

