மோட்டார் சைக்கிள் சாரதிக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம்

266 0

நபரொருவரை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து ஹொரணை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் கடந்த முதலாம் திகதி ஒருவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றிருந்தார். பலத்த தேடுதலின் பின் சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.  அவர் மீதான விசாரணையில் அவர் பல குற்றங்களை அவர் புரிந்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஒருவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றது, ஆயிரம் சிசி திறன்கொண்ட மோட்டார் சைக்கிள் பாகங்களை சட்ட விரோதமாக நாட்டினுள் எடுத்துவந்தது, போலியான இலக்கத் தகடுகளைப் பொருத்தியிருந்தது மற்றும் பதிவு செய்யாத வாகனம் ஒன்றைச் செலுத்தியது உள்ளிட்ட பன்னிரண்டு குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அவருக்கு மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்துடன், ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டுச் சிறை தண்டனையும் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹொரணை நீதவான் நீதிமன்றினால், மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதமாக இது பதிவாகியுள்ளது.

Leave a comment