2025ல் எயிட்ஸ் நோயற்ற நாடாக இலங்கை

233 0

2025ல் எயிட்ஸ் நோயற்ற நாடாக இலங்கை உருவாக்கப்படும் என தேசிய பால் நோய் தொடர்பான பிரிவு அறிவித்துள்ளது. எயிட்ஸ் நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக
அப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

அதிகளவில் கொழும்பில் எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகின்றனர் என தெரிவித்துள்ள அவர் நோய்த் தொற்று பரவியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதுடன், நோய்த் தொற்று பரவுவதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

பால் வினை நோய்கள் தொடர்பில் போதியளவு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment