மாதாந்தம் 30000 அமெரிக்க டொலர்களை செலுத்தும் இலங்கை

293 0

malik-samarawickrama-1129இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்காகவும் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டும், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமெரிக்காவின் பொதுமக்கள் உறவு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்ட்லர், ட்ராவிஸ் மற்றும் ரோசேன்பேர்க் என்ற நிறுவனத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

இதன்மூலம் சமாதான முன்னெடுப்புக்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. எனினும் இந்த விடயம், இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு தெரியாது என்று ஆங்கில ஊடகம் கூறுகிறது.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சஜின் வாஸ் குணவர்த்தன, அமெரிக்க நிறுவனங்களுடன் இவ்வாறான உடன்படிக்கைகளை மேற்கொண்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தமது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சேவைக்காக இலங்கை அரசாங்கத்தினால் அமெரிக்க நிறுவனத்துக்கு எதிர்வரும் ஜனவரி வரையில் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.