வெளிநாடுகளுடனான உறவை பேண புதிய திட்டம்

301 0

Mangala-Samaraweera22 நாடுகளுக்கு வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் வெளிவிவகார சேவை கொள்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வதிவிடமற்ற தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு நியமிக்கப்படும் தூதுவர்கள் இலங்கையில் தங்கியிருந்து, தமது சேவைகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஓராண்டுக்கு சில தடவைகள் குறித்த நாடுகளுக்கு சென்று தமது பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

வீசா வழங்குதல், குறித்த நாடுகளுடன் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளல் ஆகியனவே இந்த வதிவிடமற்ற தூதுவர்களின் பிரதான கடமைகளாகும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து, பிஜீ, செக்குடியரசு, கஸகஸ்தான், மொரிசியஸ், மொரக்கோ, ஹங்கேரி, சிலி, பேரு, பல்கேரியா, கஸகஸ்தான், பொட்ஸவானா, கம்போடியா, செனகல், கானா, அயர்லாந்து, வத்திக்கான், தன்சானியா போன்ற நாடுகளுக்கு இவ்வாறு வதிவிடமற்ற தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.