இலங்கையில் 25 வீதமானோர் முதியவர்களாகும்- புள்ளிவிபரவியல் திணைக்களம்

521 0

தெற்காசியாவில் வயதானவர்கள் அதிகமாகவுள்ள நாடுகளில் இலங்கையும் முதலிடம் வகிப்பதாக குடிசன மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள மொத்த சனத் தொகையில் 12.4 வீதமானோர் 60 வயதைத் தாண்டியவர்கள் என திணைக்களத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன.

இதன்படி, எதிர்வரும் சில தசாப்தங்களில் முதுமையடைந்தவர்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும் எனவும் அத்தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

2041 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் வயோதிபர்களாக இருப்பர் எனவும் அத்தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச முதியோர் தினம் இன்று (01) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment