சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் கலந்துகொள்ளும் 8 ஆவது மாநாடு கொழும்பில்

264 0

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

எட்டாவது தடவையாக நடைபெறும் இம்மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். சார்க் நாடுகளின் செயலாளர் நாயகமும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment