அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

378 0

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் முன் அறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் என அண்மையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கும்போது இதனை குறிப்பிட்டார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால் நாட்டின் மருத்துவ சேவை பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும்பட்சத்தில் அதற்கு எதிரான மக்களின் நிலைப்பாடுகளுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முகம்கொடுக்க நேரிடும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment