சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பொது மக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் வடமேற்கு பகுதியில் இன்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல் ரஷ்ய அல்லது சிரிய படையினரால் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

