சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று, தெஹிவளை மிருகக் காட்சி சாலை மற்றும் பின்னவளை யானைகள் சரணாலயத்தைப் பார்வையிடுவதற்கு சிறுவர்களுக்கு விஷேட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறார் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இவ்விடங்களை இலவசமாகப் பார்வையிடலாம் என வன விலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

