காலியில் வங்கியொன்றில் தீ விபத்து.!

389 0

காலியில் வங்கியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி பலபிடிய என்னும் இடத்தில் அமைந்துள்ள அரச வங்கியொன்றே இவ்வாறு தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

காலி மாநாகரசபையின் தீயனைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

குறித்;த சம்பவத்தில் இதுவரை எதுவித உயிர் ஆபத்துக்களும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment