சிங்கள ராவய அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

564 0

மியன்மார் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா தடுப்பு முகாமுக்கு முன்னாள் மற்றும் அதன் வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காலி நீதவான் நீதிமன்றத்தால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் மற்றும் சிங்கள தேசிய சக்தி அமைப்பின் தேரர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூஸா தடுப்பு முகாம் வளாகத்தில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, நீதிமன்றத்தால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மியன்மார் ஏதிலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று கைதானவர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதிகவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை நீதவான் இன்று இந்த விளக்கமறில் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மியன்மாரில் இருந்து இலங்கையில் தஞ்சமடைந்த 30 ஏதிலிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என தெரிவித்து கடந்த 26 ஆம் திகதி பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட 34 வயதுடையவரே இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளார்.

Leave a comment