பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

307 0

தேசிய நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் பல்லின, மும்மொழி தேசிய பாடசாலையின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை, கதுருவெலவில் நிர்மாணிக்கப்படும் மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய நிர்மாணிக்கப்படும் இப்பாடசாலை அனுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற அண்மைய மாவட்டங்களின் பல்லின மும்மொழி பாடசாலையின் தேவையை நிறைவு செய்தல், ஆங்கில மொழிமூல கல்வியை பரவலாக்குதல் மற்றும் போட்டித்தன்மையுடைய சமூக பொருளாதார உலகுக்கு பொருத்தமான தேசிய நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் உயர் அறிவுடைய பூரணமான மாணவ தலைமுறையை உருவாக்குவதற்கான அடிப்படை நோக்கத்துடன் கூடியதாகும்.

6 ஆம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரையான வகுப்புக்கள் நடத்தப்படவுள்ள இப்பாடசாலை, அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற் கட்டமாக 6, 7 ஆம் வகுப்புகளுக்கான இருமாடி கட்டடம், மாணவர் விடுதி, நிர்வாக கட்டடம், சுகாதார வசதிகள், ஆய்வுகூடம், ஆசிரியர் விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

நினைவு பலகையை திறந்து வைத்த ஜனாதிபதி, பாடசாலை வரைபடத்தையும் பரிசீலித்தார்.

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சிந்து உள்ளிட்ட பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment