டிசம்பரில் 4,000 வீடுகள் பொதுமக்கள் பாவனைக்கு

293 0

“நகர மறுமலர்ச்சி” திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 4,000 வீடுகளை டிசம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த வீடுகளை பேரை வாய்க்கால் பகுதியில் வாழும் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வருடத்தில் மேலும் 5,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இத்திட்டங்களுக்கு 280 பில்லியன் ரூபா செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரை கவர்ச்சி தரும் சுற்றுலா தலமாக மாற்றுவதற்காக பேரை வாய்க்கால் பகுதியில் நடைபாதை ஒன்றை நிமாணிப்பதற்காக அப்பகுதியில் வசித்த மக்களுக்கு வேறு பகுதியில் புதிய வீடுகள் வழங்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment