ஜப்பான் வேலைவாய்ப்பு உண்மையில்லை – பிரதமர் அலுவலகம்

1219 22

தமது அலுவலகம் மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் எந்த வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

தமது அலுவலகம் ஊடாக ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பிரதமர் அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment