இலஞ்சம் கோரிய மதுவரித் திணைக்கள அதிகாரி விளக்கமறியலில்

350 0

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாது இருப்பதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட அழுத்கம மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்குமரியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபரிடம் 50,000 ரூபா பணம் இலஞ்சம் கோரியதாகவும் குறித்த நபர் முதலில் 20,000 ரூபா வழங்கியதாகவும் மீதித் தொகையினை வழங்க முற்பட்ட வேளையிலே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment