பள்ளிவாசல் நிர்மாணிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் விவகார அமைச்சிடம் அளிக்கவும்

366 0

இஸ்லாமிய பள்ளிவாசல்களை நிர்மாணிக்கும் அனுமதியை வழங்கும் அதிகாரம் தற்போது புத்தசாசன அமைச்சிடம் காணப்படுவதாகவும், அதனை முஸ்லிம் விவகார அமைச்சிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, அமைச்சர் ரிஷாட் பதியூதின் உள்ளிட்ட குழுவினர், அண்மையில் (26ம் திகதி) ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அசாத் சாலியால் இதற்கு முன்னதாக ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய, அமைச்சர்களான ரிஷாட் பதியூதின், ரவூப் ஹக்கீம் மற்றும் அசாத் சாலி ஆகியோர், மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையால் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த விடயம் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதியால் கூறப்பட்டுள்ளது.

Leave a comment