காலி கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழையத் தடை

642 2

உலகப் பிரசித்தி பெற்ற காலி கோட்டை அமைந்துள்ள பகுதியில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையுத்தரவின்படி, மூன்று மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட வாகனங்களும், ஐந்து தொன்களுக்கு அதிக எடையுள்ள வாகனங்களும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படவிருக்கிறது.

உலகின் புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட காலி டச்சுக் கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழைய கடந்த 2009ஆம் ஆண்டே வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டபோதும், அது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை.

வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்தக் கோட்டையின் வரவேற்பு வளைவு, கடந்த பெப்ரவரி மாதம் லொறியொன்றினால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து எழுந்த புகார்கள், கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்தப் புதிய தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment