பாடப்புத்தகங்களுக்காக எதிர்காலத்தில் வவுச்சர் முறைமை

354 0

பாடப்புத்தகங்களுக்காக எதிர்காலத்தில் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பாடப்புத்தகங்களை அச்சிடுகையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக இதனால் அதிக செலவுகள் ஏற்படுகின்றன.

எனவே அதற்கு மாற்றீடாக வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்குவது குறித்து ஆராய்ந்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment