சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பை அடுத்து, உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளன.
அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒருகோப்பை தேனீரின் விலை 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் பால் தேனீரின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
மேலும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாகவும், சோற்றுப் பொதி ஒன்றின் விலை 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் உரிமை பாகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் வதானகே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது நீதியானது இல்லை என்றும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

