நாட்டில் புதிதாக தோன்றிய எந்த அரசாங்கமும் எந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பதுளை நகரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மின்விநியோக கட்டமைப்பை திறந்து வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
எந்த ஒரு அரசாங்கமும், ஒருநாளிலோ, ஒரு மாதத்திலோ பெறுபேறுகளை வெளிப்படுத்தியதில்லை.
அரசாங்கத்தின் பெறுபேறுகள் வெளியாக்கப்படுவதற்கு குறிப்பிட்ட சில கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன.
இலங்கை மீது சர்வதேச நாடுகள் நல்லபிப்பிராயமும், நம்பிக்கையும் வைத்துள்ளன.
இதனைப் பயன்படுத்தி, நாட்டை முன்னேற்றுவதற்கான பயணத்தை அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

