மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனு

10362 0

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில் அரச துறை அதிகாரிகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாவலபிட்டி பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரான மங்கள புஸ்பகுமார என்பவராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனுவின் பிரதிவாதியாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் அரச அதிகாரிகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது போயுள்ளதாக, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஒருகோடி ரூபா நஸ்டஈடு வழங்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளதாக, எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment