தம்புள்ளை – மிரிஸ்கோனியா சந்தி – பலுகால பிரதேசத்தில் இற்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மனிதப் படுகொலை ஒன்றின் குற்றவாளிகள் மூவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
1998ம் ஆண்டு சோமரத்ன என்பவருடைய கொலை தொடர்பில் தம்புள்ளை பொலிஸாரினால் கண்டி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன அநுர குமார ஹேரத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது மற்றும் ஆறாவது சந்தேகநபர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
அதேநேரம் நான்காவது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.

