திட்டமிட்டபடி பாராளுமன்றத்தின் முன்பு இன்று ஆர்ப்பாட்டம்

353 0

காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி நான்கு அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

இராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம், தேசிய சுதந்திர முன்னணி, தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் மற்றும் உலக இலங்கையர்கள் பேரவை ஆகிய தரப்புக்கள் ஒன்றிணைந்து ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்.

காணாமல் போனோர் சட்டமூலமானது இறந்த காலத்தை பாதிக்காது மாறாக எதிர்காலத்திற்கே தாக்கம் செலுத்தும் என்று அரசாங்கம் கூறினாலும் அது பொய்யான விடயம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் இராணுவ வீரர்கள்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவே இந்த சட்டமூலத்தினை முழுமையாக இரத்துச் செய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்ததனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தினால் பாராளுமன்ற வீதிக்கு பல மணி நேரம் பூட்டிடப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு வேலிகளும் இடப்பட்டிருந்தது.

தண்ணீர்தாரை வண்டிகளும் தயார்படுத்த நிலைமையில் இருந்தபோதும் ஆர்ப்பாட்டத்தின்போது பெறும் குழப்பம் ஏற்படாத காரணத்தில் அவற்றின் செயற்பாட்டிற்கான அவசியம் இல்லாமல் போனது.

எவ்வாறாயினும் பாதுகாப்பு வேலியின் முன்பாக கொடும்பாவிகளை எரித்து பாதுகாப்பு வேலிகளின் முன்பாக நின்று கடும் எதிரத்து கோசங்களை ஆர்ப்பாட்டகாரர்கள் எழுப்பியிருந்த நிலையில் பத்தரமுல்லை நகரின் போக்குவரத்துச் செயற்பாடுகளும் பல மணிநேரம் ஸதம்பிதமடைந்து போனது.

அதனையடுத்து மு.ப 1 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாமாக கலைந்து சென்றிருந்தனர்.

Leave a comment