சைட்டம் எதிர்ப்பு வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடைகிறது.

293 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி, சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.

சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி கடந்த 12ஆம் திகதியில் இருந்து 25 மாவட்டங்களிலும் வாகன பேரணியாக ஆரம்பமானது.

இவற்றிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாவட்டங்கள் தோறும் சுழற்சி முறையில் பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, இன்றைய தினம் புத்தளம், கம்பஹா, கேகாலை, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு பிரித்தானியாவில் மருத்துவர்களாக சேவையாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் மருத்துவ சபை இந்த தீர்மானத்தை நேற்று அறிவித்தது.

இதுதொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சைட்டம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்ததன் பின்னர் பிரித்தானியாவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment