ருவன்வெல்ல – மோரலியவத்த பிரதேசத்தில் குடியிருப்பில் கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.பின்னர் குறித்த நபர் அந்த குடியிருப்பின் அருகில் இருந்த லயின் அறைக்குச் சென்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள பெண் 34 வயதானவர் எனவும் தற்கொலை செய்து கொண்டவர் 35 வயதானவர் எனவும் ருவன்வெல்ல காவல்துறையினர் குறிப்பிட்டுள்;ளனர்.
அவர்களிடம் நீண்ட காலம் நிலவிய குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு 11 வயது சிறுவர் ஒருவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

