நாட்டின் பல பாகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்படையின் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 48 பேர், ஆமை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் மற்றும் போதை பொருள் வைத்திருந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பொருட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

