மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் – பாதாள குழு தலைவர் கைது

8173 24
வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அச்சமூட்டிய சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திற்கு அருகில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட இவர் 39 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அச்சமூட்டியதாக கடந்த 5ஆம் திகதி கிரான்பாஸ் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment