இரினா பொகோவோ சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளார்.

374 0

photo_verybig_65559இலங்கை வந்துள்ள யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரங்களுக்கான ஒழுங்கமைப்பின் பணிப்பாளர் இரினா பொகோவோ இன்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
சமாதானம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு மற்றும் 2030ம் ஆண்டு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிலையான அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பில் அவரது விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரைசந்தித்துள்ளார்.

மேலும் அவர் பல்வேறு பாரம்பரிய கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் முக்கிய விடயங்கள் குறித்து அவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.